நமது கட்சியின் ஸ்தாபன தினத்தை ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 6 ம் தேதி சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறோம். நமது கட்சியின் துவக்கம், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள், கட்சியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இயக்கத்தை வென்றெடுத்த, போற்றுதலுக்குரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு. நல்லாட்சியில் வழங்கிய சாதனைகள் ஆகியவை நமது தொண்டர்களை மட்டுமின்றி,, மக்களையும் சென்றடையும் வகையில் நாம் நிகழ்ச்சிகளை கிளை அளவில் நடத்திட வேண்டும்.
கட்சியின் ஸ்தாபன தினமான ஏப்ரல் 6 ம் தேதி முதல் பாரத ரத்னா டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ம் தேதி வரை சமூக நீதி வாரமாக கடைபிடித்து பல்வேறு சேவை நிகழ்சிகள் மாவட்ட மண்டல் மற்றும் கிளை அளவில் நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மாநில பொது செயலாளர் பேராசிரியர் திரு.இராம.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
– மாநில தலைவர் திரு.K.Annamalai
Add comment