ஆளுநர் பொறுப்பேற்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்தில், கட்சிக்காக அண்ணா செய்த அரிய பணிகளை நினைவு கூர்ந்து அவருக்குப்
பிரியாவிடை அளித்தோம்.
அவரது மக்கள் பணி தொடர தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் திரு ஜெய குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு GK வாசன், புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு AC சண்முகம், இந்திய ஜனநாயகக்
கட்சி நிறுவனர் திரு. பாரிவேந்தர், மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு ரவி பச்சமுத்து,
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் தலைவர் தேவநாதன் யாதவ், பாமக இணைப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் திரு. ஏ.கே. மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திரு பிரேம் தனபாலன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் திரு KK செல்வ குமார் ஆகியோர் கலந்து கொண்டு, திரு CP ராதா கிருஷ்ணன் அண்ணாவுக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
#அண்ணாமலை #TNBJP #KAnnamalai
Add comment