BJP Theni District
BJP Theni

ஜன சங்கம் முதல் பாரதிய ஜனதா கட்சி வரை

‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற சொல்லில் இருந்து பலம் பெறுகிறோம். இது நமது மையக் கருப்பொருள். தேசம் என்பது நிலம், மக்கள், பண்பாடு ஆகியவற்றின் சங்கமத்திலிருந்து உருவாகிறது.

ஜன சங்கத்தின் துவக்கம்

பாரதிய ஜனதா கட்சி என்பது சில கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. எங்கள் பலமே எங்கள் தொண்டர்கள் தான் . இது எந்த ஒரு தனிநபரையோ, தலைவரையோ, குடும்பத்தையோ அல்லது வம்சத்தையோ மையமாகக் கொண்டதல்ல.

‘பாரத் மாதா கி ஜெய்’ என்ற சொல்லில் இருந்து பலம் பெறுகிறோம். இது நமது மையக் கருப்பொருள். தேசம் என்பது நிலம், மக்கள், பண்பாடு ஆகியவற்றின் சங்கமத்திலிருந்து உருவாகிறது. கலாச்சார தேசியவாதத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

1951 ஆம் ஆண்டு திரு.சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் தோற்றுவிக்கப்பது பாரத ஜன சங்கம், அப்போதைய பிரதமர் திரு.ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து விலகி ஜன சங்கத்தை தோற்றுவித்தார்.

அடுத்த ஆண்டே அதாவது 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரத்தின் முதலாவது பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட ஜன சங்கம் 3 இடங்களை கைப்பற்றியது. பின்னர் 1953 ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட திரு.சியாம பிரசாத் முகர்ஜீ அவர்கள் அதே ஆண்டு ஜூன் மாதம் சிறையிலேயே மர்ம காய்ச்சலால் இறந்தார் என அம்மாநில சிறைத்துறை தெரிவித்தது இன்றளவுவம் அவர் மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. திரு.சியாம பிரசாத் முகர்ஜி அவர்களின் மறைவுக்கு பின்னர் திரு.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் ஜனசங்கத்தின் பொதுச்செயலாளராக 15 ஆண்டுகள் பதவி ஏற்றுக்கொண்டு ஜன சங்கத்தை வளர்த்தார்.பின்பு 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அன்று லக்னோ நோக்கி ரயிலில் பயணித்து கொண்டிருந்தபோது உத்தரபிரதேசம் முகல்சராய் சந்திப்பு ரயில் நிலையத்தில் திரு.பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்பு ஜன சங்கத்தின் தலைவராக திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றிய ஜன சங்கத்தின் கூட்டணி திரு.மொரார்ஜி தேசாயை பிரதமராக கொண்டு காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆட்சியை முதன் முதலில் பாரதத்தில் நிறுவியது ஜன சங்கம். பின்னர் நடைபெற்ற உட்கட்சி பூசல்களால் ஜன சங்கம் கலைக்கப்பட்டது. பின்னாளில் திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தார். அன்று முதல் படி படியாக வளர்ந்த பாஜக தற்போது உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

BJP Theni

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed