உள்ளூர், மாநில மொழியை மட்டும் பயன்படுத்தாமல் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி” பயன்படுத்துமாறு அரசுக்கு சொந்தமான கூட்டுறவு பால் சங்கங்களை கட்டாயப்படுத்தி FSSAI சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் “தி இந்து” ஒரு கட்டுரையை வெளியிட்டது.
நமது மாண்புமிகு பிரதமர் திரு .நரேந்திர மோடி அவர்களின் கீழ் மத்திய அரசு எப்போதும் மாநில மொழிகளை ஊக்குவித்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். முதன்முறையாக புதிய கல்விக் கொள்கையில் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கல்வி அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நமது மாண்புமிகு பிரதமர், பல்வேறு உலகளாவிய மன்றங்களில், தமிழ் மொழியின் செழுமையைப் பாராட்டியுள்ளார்
எனவே, FSSAI ன் இந்த அறிவிப்பு பிரதமரின் கொள்கையோடு ஒத்துப்போவதாக தெரியவில்லை
நமது மாண்புமிகு பிரதமர் எண்ணம் போல் பிற மொழிகளை மேம்படுத்த, பாஜக தமிழ்நாடு சார்பாக, FSSAI வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் மாநில மொழி வார்த்தைக்குப் பதிலாக “தஹி” என்ற வேறு மொழி சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளக்கூடாது. மேலும் மாநில கூட்டுறவு பால் சங்கங்கள் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் புது தில்லியில் உள்ள திரு.ராஜேஷ் பூஷன் ஐஏஎஸ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய தலைவர் அவர்களுக்கு கடிதம்
K.Annamalai
Add comment