3 முதல் 4 யூனிட் லோடுக்கு அனுமதி வாங்கிவிட்டு, ஒவ்வொரு லாரியிலும் தினமும் 10 முதல் 12 யூனிட் கல், மணலை கேரளாவுக்குக் கடத்திச் சென்று கொண்டிருக்கின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இத்தனை ஆழம் தோண்டக் கூடாது என்பதைக் கூட பொருட்படுத்தாமல் செயல்படுகின்றனர். இந்த பகுதிகளில், கடந்த 75 ஆண்டுகளாக 50 அடி மட்டுமே தோண்டப்பட்டிருந்த கல் குவாரிகளில், கடந்த இரு ஆண்டுகளில் 200 அடிக்கும் மேலாக தோண்டியிருக்கிறார்கள்.
கனிம வளத்தை வைத்து அரசு கஜானாவை நிரப்புவோம் என்று சொன்னவர்கள், இன்று கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்களிலிருந்து கமிஷன் வசூலிக்க VP & Co என்ற ஒரு கம்பெனியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்னும் 21 நாட்களுக்குள் திறனற்ற திமுக அரசு அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகளை மூட வேண்டும். மேலும் தோண்டுவதற்கு எந்த அளவுக்கு அனுமதி வழங்கப்பட்டதோ அதை கல்குவாரிகள் மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இதை அரசு செய்யத் தவறினால், தமிழக பாஜக செய்யும்.
– மாநில தலைவர் திரு.K. அண்ணாமலை.
#KAnnamalai #TNBJP
Add comment